பேரன்போடு வாழும் வாழ்வைப் போதிக்கிறது.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய அமைச்சர்!

vinoth

திங்கள், 5 மே 2025 (10:05 IST)
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றுன் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக கடந்த வாரம் ரிலீஸானது சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம். சிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு உருவாகி இருந்தது.

இதனால் படம் ரிலீஸான பின்னர் நாளுக்கு நாள் வசூலின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் மூன்று நாட்களில் சுமார் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த படம், நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகபட்சமாக சுமார் 3.50 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து, 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. படத்துக்கு நல்ல விமர்சனம் வந்துள்ளதால் இரண்டாம் வாரத்திலும் கலெக்‌ஷன் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தைப் பார்த்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் “டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம். படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும்,இரக்கமும்,உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்… இல்லை.. இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக் காட்டும் அற்புதமான படம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன். படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும்,இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்” எனப் பாராட்டியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்