10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

vinoth

திங்கள், 5 மே 2025 (07:59 IST)
குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் அடுத்தப் படமாக கடந்த வாரம் ரிலீஸானது சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம். சிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ரிலீஸாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கினர். அதன் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோருக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்ட அவர்கள் சொன்ன நேர்மறையான விமர்சனங்கள் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இதனால் படம் ரிலீஸான பின்னர் நாளுக்கு நாள் வசூலின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் மூன்று நாட்களில் சுமார் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த படம், நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகபட்சமாக சுமார் 3.50 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து, 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. படத்துக்கு நல்ல விமர்சனம் வந்துள்ளதால் இரண்டாம் வாரத்திலும் கலெக்‌ஷன் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்