இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

vinoth

சனி, 3 மே 2025 (13:21 IST)
குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ரிலீஸாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கினர். அதன் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோருக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்ட அவர்கள் சொன்ன நேர்மறையான விமர்சனங்கள் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

முதல்நாளில் இந்த படம் 2 கோடி ரூபாய் வசூலித்து நல்ல ஓப்பனிங்கைக் கொடுத்தது. அதையடுத்து இரண்டாம் நாளான நேற்று வேலை நாளாக இருந்தும் சுமார் 1.65 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்த படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்