சிவாஜி ரசிகர்களுக்கா எம் ஜி ஆர் செய்த செயல்… இதுதான் ராஜ தந்திரமா?

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (07:41 IST)
1950 கள் முதல் 70 களின் இறுதிவரை தமிழ் சினிமாவில் இருபெரும் துருவங்களாக கோலோச்சியவர்கள் எம் ஜி ஆரும் சிவாஜி கணேசனும். இருவரின் ரசிகர்களும் இப்போதைய விஜய் அஜித் ரசிகர்கள் போல அப்போது உக்கிரமாகக் களமாடுவார்கள். ஆனால் சிவஜிக்கும் எம் ஜி ஆருக்கும் இடையே எப்போதும் நட்புறவு இருந்து வந்துள்ளது.

அந்த நட்பை விளக்கும் விதமாக மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் பகிர்ந்துகொண்ட சம்பவம் ஒன்று இன்றைய ரசிகர்களை வெகுவாகக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இது சம்மந்தமாக முகநூலில் வைரலாகும் ஒரு பதிவு:-

பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில்  நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி.”அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு” என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். “அண்ணே வாங்க வாங்க…  எங்க இவ்வளவு தூரம்?” என்றார் சிவாஜி.   தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி “இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?” என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , “என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க” என்றார்.

சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்