லியோ படத்தை தூக்கிவிட்டு ‘ரிக்சாக்காரன்’ படத்தை திரையிட்ட சென்னை தியேட்டர்..!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:43 IST)
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியான நிலையில் ஒரே வாரத்தில் இந்த படத்தை தூக்கிவிட்டு எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் என்ற படத்தை சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கு திரையிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு பக்கம் லியோ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பு கூறிக் கொண்டிருக்கும் நிலையில் லியோ திரைப்படம் வெளியிட்ட திரையரங்குகள் அனைத்துமே காலியாக உள்ளது என்பதுதான் உண்மையாக உள்ளது 
 
இந்த நிலையில் உள்ள சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் இதுவரை நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு கொண்டிருந்த நிலையில் தற்போது இரண்டு காட்சிகளாக குறைக்கப்பட்டு மீதமுள்ள இரண்டு காட்சிகள் எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. 
 
50 ஆண்டுகளுக்கு வெளியான ஒரு திரைப்படத்தை லியோ திரைப்படத்திற்கு பதிலாக திரையிடப்பட்டிருப்பது அந்த படத்தின் மிக மோசமான வசூலையே காட்டுகிறது என்று  கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்