’லியோ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? கசிந்த தகவல்..!

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (19:04 IST)
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்த ’லியோ’ திரைப்படம்  ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசான நிலையில் இந்த படம் நவம்பர் 21ஆம் தேதி ஓடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த படத்தை மிகப்பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் இந்த படம் இன்னும் நன்றாக வசூல் செய்து கொண்டிருப்பதால்  படக்குழுவினர் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் விரைவில் ஓடிடியில் இந்த படம் வந்தால் மீண்டும் ஒரு முறை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்