அரவிந்த்சாமி பிறந்தநாளை முன்னிட்டு மெய்யழகன் அப்டேட் கொடுத்த படக்குழு!

vinoth

செவ்வாய், 18 ஜூன் 2024 (11:29 IST)
90ஸ் கிட்ஸின் வாழ்க்கையை காட்டும் விதமாக பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான 96 படம் பெரும் ஹிட் அடித்தது. இதையடுத்து அவர் இப்போது கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிரெம்குமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கார்த்தியோடு, அரவிந்த்சாமி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னால் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றது. பழைய படங்களின் போஸ்டர்களை நினைவூட்டும் விதமாக கருப்பு வெள்ளையில் மிக எளிமையாக அந்த போஸ்டர்கள் இருந்ததால் தனித்துக் கவனம் பெற்றன. இந்நிலையில் இன்று அரவிந்த்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முந்தைய போஸ்டர்களைப் போலவே இந்த போஸ்டரும் எளிமையாக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்