அதே அமைச்சர்களுக்கு அதே துறை தான்.. எந்த வித மாற்றமும் இருக்காது: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்..!

Mahendran

புதன், 12 ஜூன் 2024 (12:46 IST)
கடந்த முறை எந்தெந்த துறைக்கு, யார் யார் அமைச்சர்களாக இருந்தார்களோ அதே அமைச்சர்கள் அதே துறையில் இருப்பதால் எந்தவித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்றும் இந்திய மக்கள் ஏமாந்து விட்டார்கள் என்றும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
 
குறிப்பாக ரயில்வே துறையில் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த முறை அமைச்சராக இருந்தவர், இந்த முறை மீண்டும் அவர்தான் ரயில்வே துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஏற்கனவே அவரிடம் தமிழகத்தின் நன்மைக்காக பல்வேறு கோரிக்கைகளை அளித்திருந்தேன் என்றும் அந்த கோரிக்கைகள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது என்றும் எனவே மீண்டும் அவரே ரயில்வே துறைக்கு அமைச்சராக இருப்பதால் அவரிடமிருந்து எந்தவித பலனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 
 
பாஜக அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தபோது இஸ்லாமியர்களுக்கு அவர்கள் போட்டியிட வாய்ப்பே அளிக்கவில்லை அதன் பிறகு எப்படி மந்திரி சபையில் இடம் கொடுப்பார்கள்? இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை என்று பதில் அளித்தார். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்