அடுத்தடுத்து ஹிட் படங்களின் லைன் அப்… கார்த்தியின் சர்தார் 2 ஷூட்டிங் எப்போது?

vinoth

வியாழன், 13 ஜூன் 2024 (06:55 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது சர்தார் 2 படத்துக்கான திரைக்கதை வேலைகள் முடிந்து ஷூட்டிங் செல்ல தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

மெய்யழகன் படத்தை முடித்துள்ள கார்த்தி, இப்போது வா வாத்தியார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட இழுத்துக் கொண்டே செல்கிறது. இந்த படத்தை முடித்தபின்னர் கார்த்தி சர்தார் 2 ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்