இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது பிரதமர் மோடியும் இந்த சந்திப்பு குறித்து தமிழில் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் லண்டனையில் இசைஞானி இளையராஜா சிம்பொனி இசையை அரங்கேற்றிய நிலையில் அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியை இசைஞானி இளையராஜா சந்தித்தார். அது குறித்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது.