இது குறித்த புகைப்படத்தை, தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. சிம்போனி வேலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பிரதமரிடம் பேசினேன். அவரது அன்புக்கும் ஆதரவுக்கும் தலை வணங்குகிறேன்," என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், லண்டனில் இசைஞானி இளையராஜாவின் சிம்போனி நிகழ்ச்சி அரங்கேற்றம் செய்யப்பட்டது. அந்த இசையை கேட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பரவசமானனர். மேற்கத்திய சிம்போனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியராக அவர் சாதனை படைத்துள்ளார்.
அடுத்த கட்டமாக, 13 நாடுகளில் சிம்போனி இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். வரும் செப்டம்பர் 6ஆம் தேதி பிரான்ஸிலும், அக்டோபர் 6ஆம் தேதி துபாயிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.