முகினை அடுத்து சேரனை வம்புக்கு இழுத்த மீராமிதுன்!

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (22:34 IST)
பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து 4 வாரத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை மீராமிதுன் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். நேற்று முகின் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அனைவரையும் அதிருப்தியை பெற்றுக்கொண்ட மீராமிதுன், இன்று சேரன் குறித்து மீண்டும் கூறிய சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் 
 
சேரன் தன்னை வேண்டுமென்றே பிடித்ததாகவும் ஆனால் இன்று அவர் புனிதர் போல் மக்களால் நடத்தப்படுவதாகவும் இது ஏன் என்று தனது புரியவில்லை என்றும் மீராமிதுன் கூறியுள்ளார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான சேரன் தன்னிடம் இவ்வாறு நடந்ததை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான கமல்ஹாசன் அவர்களும் இதனை தட்டி கேட்கவில்லை என்று கூறினார் 
 
என்னுடைய தந்தை இப்போது உயிருடன் இல்லை என்றும் அவர் மட்டும் இருந்திருந்தால் நடப்பதே வேறு என்று மீராமிதுன் கூறியதோடு, பிக்பாஸ் வீட்டில் தனக்கு அநியாயம் நடந்த போது எந்த ஒரு ஆண் போட்டியாளரும் பெண் போட்டியாளரும் தனக்கு ஆதரவாக பேசவில்லை என்றும் அனைவரும் கோழைகள் என்றும் கூறினார் 
 
மேலும் இவ்வாறு பிறர் மீது குற்றச்சாட்டு கூறி மலிவான விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், தனக்கு விளம்பரம் தேவை என்றால் ஒரே ஒரு போட்டோஷூட் எடுத்தால் போதும் தனக்கு போதுமான விளம்பரம் கிடைத்துவிடும் என்றும் மீராமிதுன் தெரிவித்தார் 
 
சேரன் ஏற்கனவே என்னிடம் சவால் விட்டபடி திட்டமிட்டு அழுது நாடகம் நடத்தி என்னை வெளியேற்றி விட்டார். இதுதான் உண்மையில் நடந்தது. ஆனால் அவர் தற்போது புனிதர் போல காட்டப்பட்டு வருகிறார்.  சேரன் உண்மையில் என்ன செய்தார் என்று அவருடைய மனசாட்சிக்கு நன்றாக தெரியும் என்றும் மீராமிதுன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்