போனிகபூர் அலுவலகத்தில் விஜய் பட நாயகி! ‘தல 60’ நாயகியா?

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (19:41 IST)
தல அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தல60’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக புதிய கெட்டப்பில் படப்பிடிப்புக்கு தல அஜித் தயாராக இருக்கிறார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்ற கேள்வியை அஜித் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த படத்தின் நாயகி கேரக்டருக்காக 4 முன்னணி நடிகைகள் பரிசீலனையில் இருந்ததாகவும், அதில் தற்போது கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்திற்கு கீர்த்தி சுரேஷ் வந்து சென்றதாகவும் இந்த வருகையின் போது அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் ’தல60’ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ்தான் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதே போல் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ’வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படத்தில் அனிருத் இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த நிலையில் அதே போன்று இந்த படத்திலும் அதிரடி பாடல்களை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,
 
மேலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ரஜினி, அஜித், விஜய் ஆகிய மூன்று முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் என்ற பெருமையை அனிருத் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்