விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் 16 போட்டியாளர்களும் ஒருவராக நுழைந்தவர் மீரா மிதுன். இருக்கு அந்த வாய்ப்பே சர்ச்சையில் சிக்கி ஃபேமஸ் ஆனதால் தான் கிடைத்தது. ஆம், மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்ற அவர் அதை வைத்துக்கொண்டு அழகி போட்டி நடத்துவதாக கூறி பல மாடல் அழகிகளை ஏமாற்றி வந்தார்.
இதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த பட்டத்தை பறித்துக்கொண்டனர். அதன் பின்னர் மீரா மிதுன் செய்த பல கோல்மால் வேலைகள் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சமயத்தில் பிக்பாஸ் சீசன் 3க்காக விஜய் டிவி போட்டியாளர்களை தேர்வு செய்துகொண்டிருந்தனர். அப்போது மீரா மிதுனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க உள்ளே சென்ற ஒரு சில நாட்களிலேயே சேரன் தன்னை தகாத இடத்தில் தொட்டதாக பொய் கூறி அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மீரா மிதுன் நடிகர் சிவகார்த்திகேயனை விளாசி ட்விட் போட்டுள்ளார். அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னர் நான் "நம்ம வீட்டு பிள்ளை" படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துவிட்டு ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டு சென்றேன். ஆனால் படத்தில் தான் நடித்திருந்த காட்சிகள் எதனையும் நீக்கிவிட்டனர். காரணம் கேட்டால் நான் விஜய் டிவிக்கு சென்றுவிட்டதால் அதனை நீக்கிவிட்டோம் என கூறுகின்றனர். அப்படி பார்த்தால் சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து தானே வந்துள்ளார் என கேட்டு சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனத்தையும் விமர்சனம் செய்துள்ளார்.
Ten days Shoot in scorching heat and round the clock work for the movie #NammaVeettuPillai