கொக்கா மக்கா அப்படி ஒரு அழகுடா... இன்ஸ்டாவாசிகளை தூக்கி சாப்பிட்ட மாலுமா!

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (09:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் . ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.
 
வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறு வருகிறது. நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம அழகான சில புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதற்கு நேற்று வெளியான ரொமான்டிக் ப்ரோமோவில் விஜய் பேசும் "கொக்கா மக்கா அப்படி ஒரு லவ்டா" என்ற வசனத்தை வைத்து மாலுமாவை வர்ணித்து தள்ளியுள்ளார் தளபதி ஃபேன்ஸ். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்