இன்று வெளியாகிறது மாரி செல்வராஜின் ‘வாழை’ டிரைலர்!

vinoth
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (07:37 IST)
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எழுத்தாளரான மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றியை  அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு மாமன்னன் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற தன்னுடைய அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக மாரி செல்வராஜே இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம், மாரி செல்வராஜ் தான் சிறுவயதில் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்