தியேட்டரில் சோபிக்காத விடாமுயற்சி?... ஓடிடி & சேட்டிலைட் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

vinoth

வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (14:26 IST)
நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. படத்தில் அஜித்தோடு த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்க, லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இரண்டாண்டுகள் தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்க்க முடியாத ஏக்கத்தை கொண்டாடித் தணித்தனர்.

வழக்கத்துக்கு மாறாக அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்துள்ளார் என்று பாராட்டுகள் எழுந்தாலும், படத்தில் சுவாரஸ்யம் என்பது மருந்துக்கும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் முதல் நாளுக்குப் பின்னர் படிப்படியாக வசூல் வீழ்ச்சியடைந்தது. ஆனால் படம் ரிலீஸுக்குப் பிறகு பேசியுள்ள இயக்குனர் மகிழ் திருமேனி “நானும், அஜித் சாரும் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது பெருவாரியான தியேட்டர்களில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நெட்பிளிக்ஸ் தளத்தில் மார்ச் முதல் வாரத்திலும் ஏப்ரல் 14 அன்று சன் தொலைக்காட்சியிலும் இந்த படம் ப்ரீமியர் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்