மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (12:10 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாமன்னன் இசை வெளியீடு நடக்கிறது. இதையொட்டி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு காரில் உதயநிதி ஸ்டாலின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் வடிவேலு உட்கார்ந்திருக்கிறார். கருப்பு வெள்ளையில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்