மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்த தக் லைஃப் படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கூட வசூலில் ஏற்றம் காணவில்லை. இந்நிலையில் நேற்று ஐந்தாம் நாளில் இந்த படத்தின் வசூல் சுமார் 3.5 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் 40 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளது. இதனால் கமல்ஹாசனின் முந்தைய தோல்விப் படமான இந்தியன் 2 வசூலைக் கூட தக் லைஃப் கடக்காது என சொல்லப்படுகிறது.