கேஜிஎஃப் பகுதியில் ‘மார்கழியில் மக்களிசை’… இயக்குனர் பா ரஞ்சித் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (09:41 IST)
மார்கழி மாதம் என்றாலே கர்நாடக சங்கீத கச்சேரிகள் என்றிருந்ததை மாற்றி மக்களிசை பாடல்களுக்கென கடந்த சில வருடங்களாக நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி செய்து வருகிறது பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கேஜிஎஃப் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் நடக்க உள்ளதாக இயக்குனர் ரஞ்சித் அறிவித்துள்ளார். கேஜிஎஃப் பகுதியில் டிசம்பர் 23 ஆம் தேதியும் , ஓசூரில் டிசம்பர் 24 ஆம் தேதியும் நடக்க உள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்