பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

Siva

வியாழன், 8 மே 2025 (18:45 IST)
பாகிஸ்தான் திரைப்படங்களையோ தொலைக்காட்சி தொடர்களையோ ஒளிபரப்ப கூடாது என இந்திய ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த மாதம் 22ஆம் தேதி காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது.
 
இதனை அடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் ஏவுகணைகளை மாறி மாறி ஏவி வருகிறது என்பதும், இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில், பாகிஸ்தானின் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்பட பாடல்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்திய ஓடிடி  தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பாகிஸ்தானில் தயாரான திரைப்படங்களை ஓடிடி தளங்களில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்