தளபதி 68 படத்தில் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார்?

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (09:34 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்துக்கு ‘பாஸ்’ அல்லது ‘பஸ்ஸில்” என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார்.

இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் இப்போது கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப்பை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க இயக்குனர் வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கிச்சா சுதீப் ஏற்கனவே விஜய்யுடன் புலி படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்