இது என்ன அந்த படத்தின் பார்ட் 2 வா? பீஸ்ட் படத்தில் நடிக்கும் டாக்டர் பட நடிகர்கள்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:49 IST)
பீஸ்ட் படத்தில் கிட்டத்தட்ட டாக்டர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரம்மாண்டமாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் செட் அமைக்கப்பட்டு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது படமாக்கப்படும் காட்சிகளில் கிட்டத்தட்ட டாக்டர் படத்தில் நடித்த அனைத்து குணச்சித்திர நடிகர்களும் நடிக்கிறார்களாம். இதனால் டாக்டர் படத்தின் பார்ட் 2 வா என்ற பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்