நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்..!

Siva
வியாழன், 9 மே 2024 (13:08 IST)
தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா ’தி டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் ’டியர் ஸ்டூடண்ட்’ என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர்களுடன் நயன்தாரா கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் வளக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
நயன் தாராவுடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டியூட் விக்கி எழுதி, இயக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்