படுக்கைக்கு அழைத்து என் வாழ்க்கையே பாழாக்கிவிட்டனர் - நடிகை பரபரப்பு புகார்!

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (12:01 IST)
கடந்த சில மாதங்களாகவே சினிமா நடிகைகள்  இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் உள்ளிட்டவர்கள் மீது பாலியல் புகார்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தனுஸ்ரீதத்தா, கங்கனா ரணாவத், ஜீனத் அமன் உள்ளிட்ட இந்தி நடிகைகள் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது கூறிய குற்றசாட்டு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 
 
அந்தவகையில் தற்போது பாலிவுட் நடிகையான மஞ்சரி பட்நிஸ் இந்தியில் பரோட் ஹவுஸ், ஜீனா இசிகா நாம் ஹேய் உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமானார். மேலும் இவர் தமிழில் முத்திரை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் தெலுங்கில் சக்தி என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்படி பல மொழி படங்களில் நடித்த மஞ்சரி அதை அடுத்து எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் நிறுத்திவிட்டார். 
 
இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள நடிகை மஞ்சரி பட்நிஸ், சக்தி  படத்திற்கு நான் நிறைய படவாய்ப்புகள் தேடினேன். ஆனால், நான் நடிக்கவேண்டும் என்றால் அந்த  இயக்குனர்கள் எல்லோருமே தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். அவர்களின் ஆசைக்கு இணங்கினால் தான் வாய்ப்பு தருவோம் என்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி படத்தில் நடிப்பதிலிருந்து ஒதுங்கிவிட்டேன். சினிமா பின்னணி இல்லாமல் இந்த துறையில் ஜெயிப்பது கஷ்டம்” என கூறினார். நடிகை  மஞ்சரியை படுக்கைக்கு அழைத்த அந்த இயக்குனர் யார் என்பதை தெலுங்கு சினிமா உலகினர் தேடி வருகின்றனர்.   

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்