ஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற ஜிப்ரான் - எந்த படத்துக்கு தெரியுமா?

புதன், 11 டிசம்பர் 2019 (18:39 IST)
ஓர்  இசையமைப்பாளருக்கு எவ்வளவுதான் வாய் மொழிப் பாராட்டுக்கள் குவிந்தாலும், அவரது தலை சிறந்த படைப்புகளும், ரீ மிக்ஸ்களும்அனைத்து பொழுதுபோக்குத் தளங்களிலும் பரபரப்பான வரவேற்பைப் பெறும்போதுதான், அவர் மறுக்க முடியாத வெற்றியாளராக அங்கீகாரம் பெறுகிறார். 
 
மிகப் பெரிதாக் கொண்டாடப்படும் சிம்பனி இசையாகட்டும் அல்லது நமது சொந்த நாட்டுப்புறப் பாடல்களாகட்டும் இந்த வெற்றிக்கு பல முன்னுதாரணங்களைக் காட்ட இயலும். 'ராட்சசன்' படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசை்கோர்வைகள், மற்றும் பின்னணி இசை யு ட்யூப் மற்றும் பல்வேறு இசைத் தளங்களில் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன.  கேட்பவர்களின் நாடி நரம்புகளுக்கு சிலிர்ப்பூட்டும் இந்த இசை, 'எக்ஸ் ஃபைல் தீம்'ளின் இந்தியப் பதிப்பு என்று இசைஆர்வலர்களால் கருதப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக மனம் கவரும் இசை உருவாக்கத்திற்காக  ஜிப்ரான் தொடர்ந்து பல்வேறு சர்வதேச படவிழாக்களில் விருதுகளை வென்று வருகிறார். 

 
இதோ இந்தப் பட்டியலில் மேலும் ஒரு புதிய பெயர் சேர்ந்திருக்கிறது. ஆம். 'ராட்சசன்' படத்துக்காக பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருது ஜிப்ரானுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழாவின் ஒர் அங்கமான ஃபுஸன் சர்வதேச திரைப்பட விழா வார்ஸோவில் நடந்தபோது, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ஏராளமான படங்கள் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டன. இந்தக் கடும் போட்டியில் ஜிப்ரன் இசையமைத்த 'ராட்சசன்' படம் 2019ஆம் ஆண்டுக்கான பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் விருதை வென்றிருக்கிறது.
ஆக்ஸஸ் பிலிம் பேக்டரிக்காக ஜி.டில்லிபாபு தயாரித்த 'ராட்சசன்' படம், இருக்கை நுனிக்கே ரசிகனை இழுத்து வரும் உளவியல் திரில்லர் வகைப் படமாகும். 2018ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ராம் குமார் இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால், அமலா பால் மற்றும் சரவணன் பிரதான வேடங்களில் நடித்திருந்த இப்படம் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்றதுடன், விமர்சன ரீதியிலும் பாராட்டுதல்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்