ரஜினிக்காக அடித்துக்கொண்ட குஷ்பு மீனா - வைரல் வீடியோ இதோ!

வியாழன், 12 டிசம்பர் 2019 (11:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தை அடுத்து  'தலைவர் 168'  படத்தில் நடிக்கவுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்திருந்தது. 
 
இதையடுத்து தலைவர் 168 படத்தில் மீனாவும், குஷ்புவும் நடிப்பதாகக் கூறப்பட்டது. இவர்கள் இருவரும் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்துள்ளனர். தற்போது இவர்கள் இருவருமே ஒரே படத்தில் ரஜினியுடன் இணைந்திருப்பதால், ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிம்ப்ளி குஷ்பூ நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ, மீனா இருவரும் ரஜினிக்காக சண்டை போட்டுக்கொள்கின்றனர்.   இந்த வீடியோ பழையது என்றாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்