மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

vinoth
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (07:29 IST)
தமிழ் யுட்யூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்று நக்கலைட்ஸ். இவர்கள் வெளியிடும் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். ஏற்கனவே இந்த சேனலில் இருந்து தனம் அம்மாள், பிரசன்னா, உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்கள்.

இந்நிலையில் இப்போது இந்த குழுவினர் இணைந்து உருவாக்கும் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். இந்த படத்தில் மேக்னா சான்வே கதாநாயகியாகவும் , இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்துக்குப் பிரசன்னா பாலச்சந்திரன் கதை, திரைக்கதை எழுத ராஜேஸ்வர் இயக்குகிறார். சுஜித் ஒளிப்பதிவு செய்ய கண்ணன் பாலு படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் டைட்டில் குடும்பஸ்தன் என அறிவிக்கப்பட்டு முதல் பார்வை போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. ஒரு குடும்பஸ்தனாக பொருளாதார பிரச்சனைகள், காதல் உள்ளிட்ட விஷயங்களை சிரமப்பட்டு எதிர்கொள்ளும் ஒரு நபரின் வாழ்க்கையை சொல்வது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்