நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார்.
அதில்”நான் ஒரு வீட்டை வாங்கி அதை புதிதாக மாற்றலாம் என திட்டமிட்டிருந்தேன். அந்த வீட்டுக்கு என் அம்மாவும், மனைவியும் வெள்ளிக் கிழமை தோறும் சென்று விளக்குப் போட்டு வருவார்கள். ஒரு நாள் ஆர்யா அந்த வீட்டைப் பார்க்க வந்தான். வீட்டைப் பார்த்துவிட்டு மச்சான் இந்த வீடு சரியில்ல. இத இடிச்சிட்டு புது வீடு கட்டு என்றான். உடனே யாருக்கோ போன் செய்தேன், அவர் வந்து பார்த்தார். அடுத்தடுத்த நாட்களில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். இப்போது வெள்ளிக்கிழமை எங்க அம்மாவும், மனைவியும் போயுள்ளார்கள். பார்த்தால் வீட்டைக் காணவில்லை. என்னிடம் கேட்டபோது ஆர்யா சொன்னதை சொன்னேன்”. அதைக் கேட்டு ஷாக் ஆன அவர்கள் “டேய் நீங்க படத்துலதானடா இப்படியெல்லாம் பண்ணுவீங்க” எனக் கூறினார் என ஜாலியாகப் பேசியுள்ளார்.