உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கொரிய வெப்சிரிஸான ஸ்குவிட் கேமின் 3வது சீசனுக்கான டீசர் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள வெப் சிரிஸ்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது ஸ்குவிட் கேம். கொரிய வெப் சிரிஸான இந்த தொடரின் முதல் சீசன் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு இரண்டாவது சீசனும் வெளியானது.
பணத்தேவை, கடன் தொல்லையால் கஷ்டப்படும் மக்களை அழைத்து வந்து உயிர் வாங்கும் விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் கும்பல், அதில் கடைசியில் உயிருடன் இருப்பவருக்கு கோடிக்கணக்கில் பணத்தை வழங்கும். இந்த தொடரானது மனிதனின் பணத்தாசை, மனிதாபிமானமற்ற சுயநல போக்கு போன்றவற்றை கேள்வி எழுப்பும் வகையில் உள்ளதால் பெரும் ஹிட் அடித்தது.
கடந்த சீசனில் இந்த கேமை நடத்தும் கொடூர மனம் கொண்டவர்களை தேடி பிடிக்க ஹீரோ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அதை தொடர்ந்து இனி நடைபெறப்போகும் போட்டிகளில் என்ன ஆகும்? ஹீரோ அந்த கும்பலை வீழ்த்தி இந்த ஸ்குவிட் கேமை எப்படி நிறுத்தப்போகிறார்? என்ற கேள்விகளுக்கு விடையாக ஸ்குவிட் கேம் 3 வெளியாக உள்ளது.
அதன் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் வேகமாக வைரலாகி வருகிறது. இதுதான் இந்த சிரிஸின் கடைசி சீசன் என சொல்லப்படுவதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Edit by Prasanth.K