வாரிசு நடிகரின் தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்த மம்மூட்டி! வெளியான அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (10:30 IST)
நடிகர் அகில் நாகார்ஜுனா நடிக்கும் தெலுங்கு படமான ஏஜெண்ட்டில் மம்மூட்டி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் இப்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகும் புதிய படமான ஏஜெண்ட்டை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். அந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க மோகன் லால் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்துவிடவே இப்போது மம்மூட்டியுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இப்போது மம்முட்டி நடிகக் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மம்மூட்டியின் புகைப்படத்தோடு ‘த டெவில்  கருணையில்லாத பாதுகாப்பாளர்’ எனக் கதாபாத்திர அறிமுகம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்