பாலிவுட் இயக்குனர்கள் கேட்பதைக் கொடுப்பார்கள்… ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள்? போனி கபூர்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (10:08 IST)
வலிமை படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் போனி கபூர் மீண்டும் அஜித்துடன் இணைய இருக்கிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆன திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அதன் பின்னர் அஜித்தோடு அவர் வலிமை படத்திலும் இணைந்தார். இப்போது மூன்றாவதாக அஜித் 61 படத்தையும் அவரே தயாரிக்கிறார். சமீபகாலமாக அஜித் ஒரே தயாரிப்பாளருக்கு அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வலிமை வெளியாகி வசூலில் நல்ல கல்லா கட்டிவரும் நிலையில் போனி கபூர் தென்னிந்திய படங்களுக்கு வட இந்தியாவில் நல்ல டிமாண்ட் உள்ளதாக கூறியுள்ளார். அவர் ‘வட இந்திய இயக்குனர்கள் கே எஃப் சி, மெக்டொனால்ட் போல. அவர்கள் நாம் என்ன கேட்கிறோமோ அதைக் கொடுப்பார்கள். ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள் பருப்பு, கூட்டு, சோறு எனக் கலந்து கொடுக்கிறார்கள். அதுதான் ரசிகர்களுக்கும் பிடிக்கிறது. அதனால்தான் நான் தென்னிந்திய படங்களை முதலில் தயாரிக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்