வசூலில் கலக்கும் மம்மூட்டியின் கன்னூர் ஸ்குவாட்..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (07:59 IST)
மம்மூட்டியின் சமீபத்தைய படமான கன்னூர் ஸ்குவாட் படம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படம் வசூலில் கலக்கி வருகிறது. தீரன் போல போலீஸ் துறை தேடிச் செல்லும் ஒரு கடினமான வழக்கைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது.

சுமார் 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், திரையரங்கு மூலமாக மட்டுமே 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து முன்னேறி வருவதாகவும், விரைவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மம்மூட்டியின் சமீபத்தைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தொடர்ந்து நடித்து வரும் மம்மூட்டி, அந்த படங்களை தன்னுடைய மம்மூட்டி கம்பெனி மூலமாக தயாரித்தும் வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்