தளபதி 68 படத்தில் விஜய்யை அடுத்து பிரசாந்துக்கும் டி ஏஜிங் தொழில்நுட்பம்?

வெள்ளி, 13 அக்டோபர் 2023 (07:43 IST)
பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை முதல் கட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் விஜய்யை இளமையாக காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது அதே தொழில்நுட்பத்தை பிரசாந்துக்கும் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்