தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதனால் இப்போது மம்மூட்டியை வைத்து ”டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்ற மலையாளப் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் கடந்த மாதம் படத்தின் டீசர் ஒன்று வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படம் ஜனவரி 23 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது. டோம்னிக் என்ற துப்பறிவாளராக நடித்திருக்கும் மம்மூட்டி தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி எப்படி சிக்கல்களை தீர்க்கிறார் என்பதை சுவாரஸ்யமாக இந்த டிரைலர் காட்டியுள்ளது. படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை இந்த டிரைலர் தூண்டியுள்ளது.