ரன்வீர்சிங் - தீபிகா படுகோனே தம்பதிக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்..!

Siva
ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (15:28 IST)
பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு தான் காதலித்த நடிகை தீபிகா படுகோனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமான நிலையில் அவ்வப்போது கர்ப்பமான புகைப்படங்களை பதிவு செய்தார் என்பதும் சமீபத்தில் கூட அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது போட்டோஷூட் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவ வலி வந்ததால் தீபிகா அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு  பெண் குழந்தை பிறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து பாலிவுட் திரை உலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெண் குழந்தையை வரவேற்கிறோம் என்று தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த பதிவு மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்