தமிழக மக்களை பார்த்து அதிசயித்து பாராட்டிய மலையாள இயக்குனர்!!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (11:40 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து குவிந்த தமிழக மக்கள் குறித்து பிரபல மலையாள இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் முகநூலில் பதிவிட்டுள்ளார். 


 
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதையடுத்து தமிழகம் முழுவதும் வன்முறை நிகழ்ந்துவிடுமோ, என்ற அச்சத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வைத்தனர். அதோடு வர்த்தக நிறுவனங்கள் கடைகள் மூடப்பட்டது. பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால் வன்முறை எதுவும் நிகழ்ந்துவிமோ என்ற அச்சம் மக்களின் மனதில் இருந்தது.
 
 
அதே நேரத்தில், லட்சக்கணக்கானோர் சென்னைக்கு சாரைசாரையாக வந்து முதல்வருக்கு அஞ்சலில் செலுத்தினர். மக்கள் மனதில் ஆழ்ந்த சோகம் ஒருபக்கம், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையும் நிலவியது. இருப்பினும் ஒரு சிறு அசம்பாவிதங்கள் கூட நிகழாமல், முதல்வருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

 
அவரின் ட்விட்டர் பதிவில், "மிகவும் இறுக்கமான சூழலிலும் சென்னையின் நடந்தது எனக்குப் பிடித்திருந்தது. இங்குள்ள தமிழ் மக்கள் பொறுமையான, அமைதியான, மரியாதையானவர்கள். எனக்கு இந்த நகரம் அதிகம் கற்றுக் கொடுத்துள்ளது. இன்றும் என்னுடைய ஆசானாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

 
அடுத்த கட்டுரையில்