அஜித்தை எடுத்துக்காட்டாகக் கூறி TTF வாசனை நக்கல் செய்த கோவை மாநகரக் காவல்துறை!

vinoth

திங்கள், 13 ஜனவரி 2025 (09:38 IST)
துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் “அஜித்குமார் ரேஸிங்” அணி மூன்றாவது இடத்தை பெற்றதையடுத்து அஜித்துக்கும் அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அஜித்தின் சக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

துபாய் 24 ஹெச் கார் ரேஸில் அஜித்தின் அணி கலந்து கொண்ட நிலையில் கடைசி நேரத்தில் அஜித் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அவரது அணியின் மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 24 மணிநேரத்தில் அதிக தூரத்தைக் கடந்த அணிகளின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். இதையடுத்து அஜித் குமாருக்கு தமிழ் சினிமாவில் இருந்து அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் கோவை மாநகராட்சி காவல்துறை அஜித் ரேஸில் வெற்றி பெற்றதை வைத்து டிடிஎஃப் வாசனை நக்கல் செய்து ஒரு மீம் வெளியிட்டுள்ளது. அதில்7 ஜி படத்தில் நாயகனை அவரது தந்தை திட்டும் புகைப்படத்தை பதிவிட்டு “திறமை இருந்தா அவர மாதிரி களத்துல போய் ஜெயிச்சு முன்னேறப் பாரு..  அதவிட்டுட்டு ரோட்டுல சாகசத்தக் காட்டுறேன்னு வீணா கேஸ் வாங்கிட்டுக் கிடக்காத” எனப் பகிர அது இப்போது வைரல் ஆகிவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்