மோகன்லாலை இயக்கும் சிம்பு பட இயக்குனர்!

vinoth

திங்கள், 13 ஜனவரி 2025 (11:51 IST)
மலையாள சினிமாவின் மூத்த நடிகராக இருக்கும் மோகன் லால் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் பல படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. சமீபகாலமாக அவரிடம் இருந்து கமர்ஷியல் வெற்றிப்படம் எதுவும் ரிலீஸாகவில்லை.

விரைவில் அவரின் சூப்பர் ஹிட் படங்களான திருஷ்யம் மற்றும் திருஷ்யம் 2 ஆகியவற்றின் மூன்றாம் பாகம் வரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சந்தர் சிம்பு நடித்த ‘வாலு’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத் தமிழன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்