“விஜய் சேதுபதி மீது பொறாமை இல்லை” – மாதவன்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (19:46 IST)
இருவரும் இணைந்து நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி மீது பொறாமை இல்லை’ எனத் தெரிவித்துள்ளார் மாதவன்.
 


 

மாதவனும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’, விரைவில் ரிலீஸாக இருக்கிறது. புஷ்கர் – காயத்ரி இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். விக்ரம் என்ற என்கவுண்ட்டர் போலீஸாக மாதவனும், வேதா என்ற ரவுடியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

இரண்டு நடிகர்கள் இணைந்து நடித்தால், இருவருக்கும் இடையில் பொறாமை என்ற கிசுகிசு கிளம்புமல்லவா? “எங்கள் இருவருக்கும் இடையில், எந்தப் பொறாமையும் இல்லை. ஏற்கெனவே ‘ஆயுத எழுத்து’ படத்தில் சூர்யா, சித்தார்த்துடன் இணைந்து நடித்துள்ளேன்” என்கிறார் மாதவன். மணிரத்னம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்தவர், “அவரைப் போல் எந்த இயக்குனரும் வரமுடியாது. ‘மவுன ராகம்’, ‘தளபதி’, ‘நாயகன்’, ‘அஞ்சலி’, ‘ஆயுத எழுத்து’ என வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர்” என்று புகழ்ந்துள்ளார் மாதவன்.
அடுத்த கட்டுரையில்