மாநாடு படத்திற்கு சென்சார் அதிகாரிகள் கொடுத்த சான்றிதழ்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (18:32 IST)
சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் 2 மணிநேரம் இருபத்தி ஏழு நிமிடங்கள் ஓடும் என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
மாநாடு திரைப்படம் சென்சார் ஆகி முடித்ததை அடுத்து இந்த படம் 25 ஆம் தேதி வெளியாவது 100 சதவீத உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளதால் இந்த படம் சிம்புவுக்கு மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருமே திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்