மாநாடு ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:52 IST)
மாநாடு படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த மாநாடு படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரிமியர் செய்ய உள்ளதாம் சோனி லிவ் தளம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்