களவாணி 2 ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு!

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (20:45 IST)
சற்குணம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் களவாணி. விமல், ஓவியா நாயகன், நாயகியாக இந்த படத்தில் நடித்தனா். 
 
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு எஸ்.எஸ்.குமரன் இசையமைத்திருந்தார். ராஜா முகமது படத்தொகுப்பாளராக பணியாற்றினார். ரொமாண்டிக் காமெடி வகையை சோ்ந்த இந்த படம் ரசிகா்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. விமல், ஓவியாவே மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழச்சியில் கலந்துக்கொண்டு புகழ்பெற்ற ஓவியா ஒப்பந்தமான படம் இது. 
 
களவாணி 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகா் மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் விமலின் 25 வது படமாகும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்