விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 1 முடிவடைந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 2 நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. கடந்த சீசனில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக நடிகை ஓவியா மக்களின் ஆதரவைப் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் பாகத்தைத் தொகுத்து வழங்கிய கமலே இதனையும் தொகுத்து வழங்குகிறார். நேற்று ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வீட்டுக்குள் போட்டியாளராக செல்கிறார். இதனை பார்த்த பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். முக்கியமாக பெண் போட்டியாளர்கள் (நடிகைகள்) அதிர்ச்சியும், பயமும் கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஓவியா நானும் உங்களுடன் 100 நாட்கள் இந்த வீட்டில் தங்கபோவதாக கூறுகிறார்.