லைகா நிறுவனம் தாங்கள் முன்பணம் கொடுத்து வைத்திருந்த நடிகர்கள் அனைவரிடமும் உடனடியாக படம் பண்ணித் தர சொல்லி கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை செய்துள்ளது லைகா நிறுவனம். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் அஜித்தைத் தவிர மற்ற எல்லா கதாநாயகர்களும் லைகாவுடன் இணைந்து படம் செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பல கதாநாயகர்களுக்கு அட்வான்ஸ் தொகையாகவே 100 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளது லைகா.
இப்போது கொரோனா காரணமாக பண நெருக்கடி ஏற்படவே அட்வான்ஸ் கொடுத்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் உடனடியாக படம் செய்து தாருங்கள் அல்லது கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தாருங்கள் என கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் முதலில் சிவகார்த்திகேயனை அனுகி தாங்கள் கொடுத்த 15 கோடி ரூபாய் பணத்தை தர சொல்லி கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விஷால் போன்றவர்களிடம் இதே போல பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.