”ச்சில் ப்ரோ”… விக்னேஷ் சிவனின் மன்னிப்புப் பதிவுக்கு லோகேஷின் ரியாக்‌ஷன்!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (06:59 IST)
லியோ படத்தின் உருவாக்கத்தின் போது விஜய்க்கும் இயக்குனர் லோகேஷுக்கும் பிரச்சனை மூண்டதாகவும், அதன் காரணமாக படத்தின் சில காட்சிகளை இயக்குனர் ரத்னகுமார் படமாக்கியதாகவும் டிவிட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வந்தன.

இந்த சண்டை பற்றி பகிரப்பட்ட ஒரு ட்வீட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருந்தார். இது ரசிகர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது. இந்நிலையில் இது சம்மந்தமாக விக்னேஷ் சிவன் அளித்துள்ள விளக்கத்தில் “குறிப்பிட்ட அந்த ட்வீட்டை முழுவதும் படிக்காமல் கீழே பகிரப்பட்டு இருந்த லோகேஷின் வீடியோவுக்காக அதை லைக் செய்து விட்டேன். நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். அக்டோபர் 19 ஆம் தேதி பிளாக்பஸ்டர் ஆகும் லியோ படத்தை பார்க்க உங்களைப் போலவே நானும ஆவலாக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில்  விக்னேஷ் சிவனின் அந்த பதிவை பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ் “ச்சில் ப்ரோ” என கூலாக அவரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இது விஜய் ரசிகர்களின் கோபத்தை குறைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்