’ரஜினி-171’ பட அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

Sinoj
சனி, 30 மார்ச் 2024 (19:48 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவர் தற்போது  ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.
 
இந்த நிலையில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ்,  அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
 
இதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் ரஜினி- 171 பட போஸ்டர் ரிலீஸானது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
 
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அப்போது, சினிமா ஸ்டண்ட் இயக்குனர்களுக்கான அன்பறிவ் சகோதரர்களுக்கு டாப் 10 இளைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதை வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது: நான் என்னுடைய முதல் படம் பண்ணும்போது இவர்கள் தமிழில் அறிமுகமாயினர். நான் ஆரம்பக்கட்டத்தில் அன்பறிவ் அண்ணனுடைய அலுவலகத்தில் அமர்ந்துதான் கதை எழுதினேன் என்றார். பின்னர், சூப்பர் ஸ்டார் படம் குறித்து பேசிய அவர்,  தலைவர் 171 பட டீசர் விரைவில் வெளியாகும். இந்த மாதிரி ரஜினியை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டோம். இதற்காக முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இது 100 சதவீதம் லோகேஷ் படம் என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்