இதற்கிடையே இப்படத்தின் டிஜிட்டர் உரிமை இன்னும் விற்கப்படாமல் இருந்ததாம். அதாவது, விஜய்- லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ படத்தின் டிஜிட்டர் உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தி கோட் படத்திற்கு அதை விட குறைவாக ரூ.90 கோடிக்குத்தான் கேட்கப்பட்டதாம். இதனால் படக்குழு அப்செட்டாகி, இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விஜயின் படம் ஒருபடத்தை விட அடுத்த படம் அதிக தொகைக்கு விற்பனையாகும் என்பதைச் சுட்டிகாட்டி பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இன்றைய மார்க்கெட் நிலவரமும் இறங்கியுள்ளதால் ஏஜிஎஸ் நிறுவனமும், நெட்பிளிக்ஸும் பேச்சுவார்த்தை நடந்து, கடந்த வாரம் ரூ.110 கோடியில் முடிந்துள்ளதாம். இப்படத்திற்கு என தனியாக ஒதுக்கப்பட்டதால், லியோ படம் அளவிற்கு இல்லையென்றாலும் ரூ.10 குறைவாக தொகைக்கு டீலிங் முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.