பாரிஸ் கலவரத்தில் சிக்கிய ''லெஜண்ட்'' பட நடிகை!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (21:03 IST)
பிரான்ஸில் வாகன சோதனையில் போலீஸார் ஒரு சிறுவனை சுட்டுக் கொன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலவரம் ஏற்பட்டு வன்முறை உருவானது. இதில்,  வணிக வளாகங்கள், போலீஸ் வாகனங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை அடித்து  நொறுக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் திருட்டு போயின. இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக 350 பேர் ககைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ''லெஜண்ட்'' படத்தில் நடித்த  பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டலா தன் குழுவினருடன் பட ஷுட்டிற்குச் சென்றுள்ள நிலையில், இதுகுறித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பாரிசில் நடந்து வரும் கலவரங்களும், வன்முறையும் கவலையை உண்டாக்கியுள்ளது.  எங்களுடன் வந்த குழுவினருக்காக வருந்துகிறேன்.   இந்தியாவில் இருக்கும் எங்கள் குடும்பத்தினர் எங்களைப்பற்றி கவலைப்படுகின்றனர்.  நாங்கள் இங்குப் பாதுகாப்புடன் இருக்கிறேன். அழகான பாரிஸில் இப்படி கலவரங்கள் நடப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்