உலகின் மிக பழமையான நூலகத்திற்கு வன்முறையாளர்கள் தீவைப்பு.. அரிய புத்தகங்கள் சாம்பல்..!
ஞாயிறு, 2 ஜூலை 2023 (09:46 IST)
பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய நூலகத்திற்கு வன்முறையாளர்கள் தீவைத்த நிலையில் அந்த நூலகத்தில் இருந்த அரிய வகை புத்தகங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
பிரான்ஸ் நாட்டில் தற்போது வன்முறையாளர்களின் வெறியாட்டம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மார்செய்லி என்ற நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது.
இதில் லட்சக்கணக்கான அரிய புத்தகங்கள் சாம்பலானதாக கூறப்படுகிறது. 90 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் அதில் பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 830 ஆண்டுகளுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இதேபோல் லட்சக்கணக்கான புத்தகங்கள் வன்முறையாளர்களால் எரிக்கப்பட்டது
அதேபோல் இலங்கையில் இன கலவரம் நடந்த போது அரிய நூல்கள் கொண்டிருந்த யாழ்ப்பாணம் நூலகத்திற்கும் வன்முறை கும்பல் தீ வைத்து எரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.